29th of September 2013
சென்னை::நடிகை ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்கு பின் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. வெளிநாடுகளில் நடந்த இந்திய திரைப்பட விழாக்களில் மட்டும் கலந்து கொண்டார். தற்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் லூதியானாவில் நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியொன்றுக்கு ஐஸ்வர்யாராயை அழைத்தனர். அவரும் பங்கேற்க சம்மதித்தார். விழாவுக்கு அவர் சென்றபோது கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. நகைக்கடையை சுற்றிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஐஸ்வர்யாராயை காண திரண்டு இருந்தனர்.
ஐஸ்வர்யாராய் காரில் இருந்து இறங்கியதும் கூட்டத்தினர் அவரை நோக்கி முண்டியடுத்தனர். ஐஸ்வர்யாராய் கைகளை பிடித்தார்கள் உடம்பிலும் தொட்டார்கள். ரசிகர்கள் தள்ளுமுள்ளில் சிக்கி ஐஸ்வர்யாராய் தடுமாறி கீழே விழுந்தார். அவரை விழா ஏற்பாடு செய்தவர்கள் தாங்கி பத்திரமாக அழைத்து சென்றனர். ரசிகர்கள் தொல்லையால் ஐஸ்வர்யாராய் கடும் கோபம் அடைந்தார். அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
Comments
Post a Comment