தமிழில் விரைவில் மேல்தட்டு நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலிவுட்டின் முக்கியமான நடிகையாகிறார் ஆண்ட்ரியா!

9th of September 2013
சென்னை::பச்சைக்கிளி முத்துசரம், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் நடித்தபோது தமிழில் விரைவில் மேல்தட்டு நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரியாவுக்கு பின்னர் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லை. அதனால் பின்னணி பாடுவதிலும் கவனத்தை திருப்பிய ஆண்ட்ரியா, அதையடுத்து மலையாளப் படங்களிலும் நடித்தார்.

அந்த சமயத்தில் கமலின் விஸ்வரூபம் படவாய்ப்பு கிடைத்ததால் நடிக்க கமிட்டான சில சின்ன பட்ஜெட் படங்களுக்கு வாங்கிய அட்வான்சை ரிட்டன் பண்ணிய ஆண்ட்ரியா, இப்போது விஸ்வரூபம் 2 படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் தனது கேரக்டர் வெயிட்டாக்கப்பட்டதால் இந்த படத்துக்குப்பிறகு நாமும் வெயிட்டான நடிகையாகி விடுவோம் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா.

ஆனால், அதற்கு முன்னதாகவே இப்போது அவருக்கு கற்றது தமிழ் ராம் இயக்கத்தில் உருவாகும் தரமணி படம் கிடைத்துள்ளது. இதில் புதுமுக நடிகர்தான் ஹீரோ என்பதால் மொத்த கதையும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரத்தின் மேல்தான் நகர்கிறதாம். அதனால் அதிக ஈடுபாடு காட்டி நடிக்கிறாராம் அவர். அதைப்பார்த்த டைரக்டர் ராம், ஆண்ட்ரியாவின் நடிப்பாற்றல் குறித்து பெருமையாக பேசி வருகிறார்.

குறிப்பாக, இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாகி விடுவார் ஆண்ட்ரியா. அவரது நடிப்பைப்பற்றி தரமணி படத்தின் ஒவ்வொரு காட்சியும் பேசும் என்று கருத்து கூறி வருகிறார். இதனால் ஆண்ட்ரியாவை தங்கள் பட்டியலில் வைத்திராத சில பர்பாமென்ஸ் டைரக்டர்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கின்றனர்.

Comments