23rd of September 2013
சென்னை::வாமனன் படத்தில் அறிமுகமான ப்ரியாஆனந்துக்கு ஆரம்பத்தில் தமிழில் எதிர்பார்த்த வெற்றிகள் அமையவில்லை. அதனால் தெலுங்கு. இந்தி என்று பரவலாக நடித்து வந்தவர், இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகு கோலிவுட்டில் கமர்சியல் குதிரையாகி விட்டார். அவருக்காக படங்கள் ஓடவில்லை என்றாலும், படங்கள் பெற்ற வெற்றி அவர் மீது வெளிச்சம் பாய்ச்சியதால், தற்போது ராசியான நடிகை என்கிற முத்திரையும் அவர் மீது விழுந்திருக்கிறது.
இந்த நேரத்தில் மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற வெறி அவரது மனதுக்குள் எழுந்ததால், திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வந்தார். என்றாலும், ப்ரியாவை வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்க்கிறார்கள் இயக்குனர்கள். அதனால் இத்தனை நாளும் ஏக்தம்மில் உச்சாணி கொம்பை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டிக்கொண்டு திரிந்த ப்ரியாஆனந்த், இப்போது அந்த வாய்ப்புகளுக்காக மோதி மூக்கை உடைத்துக்கொள்ள வேண்டாம் கைவசம் இருக்கும் படங்களை மலை போல் நம்பி பெருமையாக பேசிக்கொண்டு திரிகிறார்.
குறிப்பாக, இப்போது நான்தான் இளவட்ட நடிகர்களின் நாயகி. அந்த வகையில், அதர்வாவுடன் இரும்புக்குதிரை, சிவாவுடன் வணக்கம் சென்னை, விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி, கடல் கெளதமுடன் வை ராஜா வை என்று நான்கு படங்கள் உள்ளன. இந்த நடிகர்களெல்லாமே வேகமாக வளரக்கூடியவர்கள். அதனால் இவர்களுடன் சேர்ந்து நானும் வேகமாக வளரப்போகிறேன் என்று பாசிட்டிவாக நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார் ப்ரியாஆனந்த்.

Comments
Post a Comment