ஆடுகளம் டாப்ஸிக்கு படத்துக்குப்படம் கவர்ச்சி பொம்மையாக வந்து விட்டு செல்ல வேண்டும் என்பதில் துளியும் விருப்பமில்லையாம்!!!

17th of September 2013
சென்னை::ஆடுகளம் டாப்ஸிக்கு படத்துக்குப்படம் கவர்ச்சி பொம்மையாக வந்து விட்டு செல்ல வேண்டும் என்பதில் துளியும் விருப்பமில்லையாம். அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாம். அதனால்தான் தன்னை ஏராளமான படங்கள் முற்றுகையிட்டும் செலக்டீவான கதைகளை மட்டுமே ஓ.கே செய்து வருகிறாராம்.
 
இதுபற்றி டாப்ஸி மேலும் கூறுகையில், சினிமாவில் ஏதோ வந்தோம் நடித்தோம், நாலு காசு சம்பாதித்தோம் என்ற நடிகையாக இருக்க நான் ஆசைப்பட்டதே இல்லை. என் மனதுக்கு நிறைவான வேடங்களில் நடிக்க வேண்டும். எனது நடிப்புக்கு விருதுகளை பெற வேண்டும் என்றுதான் வந்தேன். அதற்கான சந்தர்ப்பங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலும், முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன்.
 
மேலும், விருது பெற வேண்டும் என்றால் நான் நடிக்கிற கேரக்டருக்கு நானே சொந்தக்குரலில் டப்பிங் பேச வேண்டும் அதனால், தெலுங்கு, இந்தி படங்களில் எனக்கு நானே டப்பிங் பேசி வருகிறேன். ஆனால், தமிழ்தான் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு தகராறாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டபோதும், ஓரிரு வார்த்தைகள்தான் பேசுகிறேன். அதனால் என்னை தமிழ் டைரக்டர்கள் டப்பிங் பேச அழைத்தாலே பயம் பற்றிக்கொள்கிறது.
 
இருப்பினும், எதிர்காலத்தில் எனக்கு நானே டப்பிங் பேசக்கூடிய அளவுக்கு தமிழில் தேர்ச்சி பெற்று விடுவேன் என்று சொல்லும் டாப்ஸி தனது உதவியாளர்களிடம் தமிழை பேச பயிற்சி எடுப்பதோடு, தனக்கு பிடித்தமான தமிழ் பாடல்களையும் அடிக்கடி முணுமுணுக்கிறாராம்.

Comments