சென்னை::தனுஷ் ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் அமைரா நடிக்கிறார்.சூர்யா நடித்த ‘மாற்றான்’ படத்தையடுத்து கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பாலிவுட் ஹீரோயின் அலியா பட் உள்ளிட்ட பலரிடம் கால்ஷீட் கேட்டபோது பிசியாக இருப்பதாக தெரிவித்தனர்.
தற்போது 20 வயதே நிரம்பிய அமைரா என்ற ஹீரோயின் கிடைத்துவிட்டார். இவர் ‘இஷ்க்’ என்ற இந்தி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர். 16 வயதிலேயே பல்வேறு டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தனுஷ் & அமைரா நடிக்கும் படத்துக்கு ‘அனேகன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் ஷூட்டிங் தொடங்குகிறது.
Comments
Post a Comment