11th of September 2013
சென்னை::கே.பாலசந்தர் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்பிரதா, கீதா மற்றும் பலர் நடிப்பில் 1979ம் ஆண்டு வெளிவந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், சினிமாஸ்கோப்பில், டிடிஎஸ் ஒலியமைப்பில் மாற்றப்பட்டு விரைவில் வெளியாகவிருக்கிறது.
இத்திரைப்படத்தை ராஜ் டிவி நிறுவனம் வெளியிடுகிறது.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.
கமல்ஹாசன் கலந்து கொண்டு டிரைலரை வெளியிடுகிறார். இயக்குனர் கே.பாலசந்தர் , இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் அமீர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.இப்படத்திற்கு எழுத்தாளர் சுஜாதா கதை, வசனம் எழுதியிருக்கிறார். எம்எஸ்வி இசையமைப்பில் கண்ணதாசனின் பாடல்கள் இன்றும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது.ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகும் நினைத்தாலே இனிக்கும்’ நிச்சயம் ஒரு இனிப்பான செய்திதான்.
Comments
Post a Comment