நைட் கிளப் – த்ரிஷாவால் பரபரப்பு!!!

25th of September 2013
சென்னை::நடிகை த்ரிஷாவிற்கும் பரபரப்பான செய்திகளுக்கும் எப்போதுமே பஞ்சமில்லை.
 
அறிமுகமாகி பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஹீரோயினாக நடித்து வருபவர் என்ற பெருமையப் பெற்றவர் த்ரிஷா.
இருந்தாலும் அவ்வப்போது அவரைப் பற்றிய சில பரபரப்பான செய்திகளும் வந்தவண்ணம்தான் உள்ளன.
 
அப்படி ஒரு செய்தி ஹைதராபாத்திலிருந்து வந்துள்ளது. சில நாட்களுக்கு முன் ஒரு நைட் கிளப்பில் அவர் மேலும் சிலருடன் சேர்ந்து கலாட்டா செய்து பரபரப்பை எற்படுத்தியதாக முன்னணி தெலுங்க இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
 
காலமான பழம் பெரும் நடிகையான காதல் மன்னனின் மனைவியுடன் த்ரிஷாவை ஒப்பிட்டு எழுதியுள்ளனர்.
 
பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் த்ரிஷா அனைத்தையும் விட்டு விட்டு இன்னும் பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்றும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Comments