சூப்பர் ஸ்டார் ரஜினி மோடிக்கு ஆதரவு போஸ்டரால் சலசலப்பு!

25th of September 2013
சென்னை::சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை மோடிக்கு ஆதரவாக இழுக்க பாஜக தலைவர்கள் பலரும் ஆளுக்கு ஒருபக்கமாக முயன்று வரும் நிலையில், ரஜினியையு்ம், மோடியையும் இணைத்து ஒரு போஸ்டரை திருச்சியில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
 
ரஜினிகாந்த் பாஜகவை ஆதரிக்க வேண்டும், மோடியை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். கோரியும் வருகின்றனர்.பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை செளந்தரராஜன் என பலரும் அடிக்கடி இதை இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் ரஜினி தரப்பில் மகா மெளனமே பதிலாக கிடைத்துள்ளது
இந்த நிலையில், திருச்சியில் நாளை நடக்கும் பாஜக இளம் தாமரை மாநாட்டில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதையொட்டி நகர் முழுவதும் பேனர்கள், கொடிகள், போஸ்டர்கள் என பாஜகவினர் அமர்க்களப்படுத்திக் கொண்டுள்ளனர்.இந்தப் பின்னணியில், ரஜினி தளம், ரஜினிகாந்த் தலைமையகம் என்ற பெயரில் ஒரு போஸ்டர் திருச்சி சுவர்களை அலங்கரித்துள்ளது.
 
அதில், ரஜிநிக்கு கோட் சூட் போட்ட மோடி பொக்கே கொடுப்பது போலவும், அதில், உங்களைத்தான் நம்புது இந்த பூமி, இனி இந்தியாவுக்கு நல்ல வழி காமி என்ற எஜமான் பட பாட்டின் வரிகளைப் போட்டுள்ளனர்.மேலும், மக்களின் எதிர்பார்ப்பே ஒளிரட்டும் பாரதம், பாரத தாயை மீட்க, தர்மம் காக்க வந்தவரே என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர்.இவற்றை ஒட்டியது உண்மையிலேயே ரஜினி ரசிகர்களா அல்லது ரசிகர்கள் போர்வையில் பாஜகவினரா என்ற பட்டிமன்றமும் திருச்சியில் ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Comments