சாமியின் இயக்கத்தில் பேராண்மை வர்ஷா!!!

28th of September 2013
சென்னை::கங்காரு படத்தில் புதுமுக நாயகனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் பேராண்மை வர்ஷா.
கொலிவுட்டில் மிருகம், சிந்துசமவெளி, உயிர் படங்களின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனர் சாமி.
 
தற்போது அண்ணன்- தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து பாசமலர் டைப் படமாக தனது செல்ல கங்காருவை உருவாக்கி வருவதாக தகவல் பரவியுள்ளது.
 
இந்த கங்காருவை தற்போதைய கால கட்டத்துக்கு பொருத்தமான பாசமலர் படம் என்றும் சொல்லலாம்.குடும்ப பொழுது போக்கு சித்திரமான கங்காருவில் அண்ணன்-தங்கை பாசம் ரசிகர்களை உருக வைக்கும் என்கிறார் கங்காரு பட இயக்குனர் சாமி.
 
அறிமுக நடிகர் அர்ஜுனா, பேராண்மை வர்ஷா இணைந்து நடித்துள்ளார்கள்.தங்கை வேடத்தில் ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்.
 
மேலும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை கொடைக்கானலில் உள்ள முக்கியமான இடங்களில் படமாக்கியுள்ளார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ஸ்ரீநிவாஸ் இசையமைத்துள்ளார்.

Comments