மகன் வற்புறுத்தலால் நடிக்க வரும் கார்த்திக்!!!

5th of September 2013
சென்னை::மகன் கவுதம் வற்புறுத்தலால் மீண்டும் நடிக்க வருகிறார் கார்த்திக். ஸ்டார் நடிகராக வலம் வந்த கார்த்திக், ஒரு கட்டத்துக்கு பின் நடிப்பிலிருந்து ஒதுங்கினார். அடிக்கடி கால்ஷீட் பிரச்னை செய்வதால் பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் 'ராவணன்' படத்தில் நடித்தார். பிறகு ஒரு சில படங்களில் நடித்தார்.
 
அரசியலில் கவனம் செலுத்தியதால் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் அவரது மகன் கவுதம், ஹீரோவாக அறிமுகம் ஆனார். 'கடல்' படத்தில் கவுதம் நடித்தார். இதையடுத்து இப்போது 'சிப்பாய்', 'வை ராஜா வை' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். மகன் நடிக்க வந்ததால் கார்த்திக்கிற்கும் சில வாய்ப¢புகள் வர ஆரம்பித்தது. ஆனால் அவருக்கு வந்தது எல்லாமே குணச்சித்ர வேடங்கள் தான். இதனால் கார்த்திக் வாய்ப்புகளை ஏற்காமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக¢க கவுதம் வற்புறுத்தியதால் கார்த்திக் நடிக்க முடிவு செய்துள்ளார்.

தனது சமகால ஹீரோக்களான பிரபு, சத்யராஜ் ஆகியோர் இப்போது குணச்சித்ர நடிகர்கள் ஆகிவிட்டனர். அதேபோல் தானும் ஒரு ரவுண்டு வர கார்த்திக் முடிவு செய்துள்ளாராம். முதல் கட்டமாக கே.வி.ஆனந்த் இயக்கும் 'அனேகன்' படத்தில் கார்த்திக் முக்கிய வேடத் தில் நடிக்கிறார். இதில் தனுஷ் ஹீரோ.
 

Comments