சிவகார்த்திகேயன் வசூல் நாயகனா?!!!

19th of September 2013
சென்னை::கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வரும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் விளம்பரங்களைப் பார்த்தவர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்திருப்பார்கள்.
 
தினமும் சிவகார்த்திகேயன் படத்துடன் ‘வசூல் மன்னர்கள்’, ‘வசூல் நாயகன்’, என கொஞ்சம் ஓவராகவே புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
கோடம்பாக்க வட்டாரத்தில் நாம் விசாரித்த வரையில் உண்மையிலேயே வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறதாம்.
 
இதுவரை, வெளியான இரண்டு வாரங்களிலேயே 20 முதல் 25 கோடி வரை படம் வசூலாகியுள்ள இப்படம் மேலும் சில கோடிகளை வசூலித்து விடும் அளவுக்கு ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
 
சிவகார்த்திகேயன் இதற்கு முன் நடித்து வெளிவந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் 10 முதல் 15 கோடி வரை வசூலித்த நிலையில் இந்த படத்தின் வசூல் பல முன்னணி நாயகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது என்பது உண்மை.
 
தன்னுடைய படங்களின் வசூல் சாதனை உயர்ந்து வருவதைப் பார்த்து சிவகார்த்திகேயனும் அவருடைய சம்பளத்தை மேலும் சில கோடி உயர்த்தி விட்டார் என்பதுதான் ஹைலைட்.!

Comments