சிம்பு-ஹன்சிகா காதலில் விரிசல்! பின்னணியில் பிரபல நடிகை!!!

6th of September 2013
சென்னை::சிம்பு-ஹன்சிகா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சிம்பு-ஹன்சிகா இருவரும் தங்கள் காதலை அண்மையில் பகிரங்கமாக அறிவித்தனர். சிம்பு நடிக்கும் வாலு, வேட்டை மன்னன் இரண்டு படங்களிலும் ஹன்சிகாதான் ஜோடி. இந்தப் படங்களில் நடிக்கும் போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அதுவே நாளடைவில் காதலாக மாறியது. இதனை சிம்பு-ஹன்சிகா வெளிப்படையாக அறிவித்தனர்.
 
இந்நிலையில் சிம்பு-ஹன்சிகா காதலில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பின்னணியில் பிரபல நடிகை ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்திருந்த அந்த நடிகை ஹன்ஷிகாவுக்கு போன் செய்து காதல் வாழ்த்துக்கள் சொன்னாராம். அப்படியே சிம்பு பத்தியும் பத்த வச்சாராம். "ஒரு வருடத்துக்கு முன்பு என்கிட்டேயும் லவ் புரபோஸ் பண்ணினார். நான்தான் வயசு வித்தியாசத்தை காரணம் காட்டி விரட்டி விட்டுட்டேன்" என்றாராம்.
 
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஹன்சிகா ஏற்கெனவே குஷ்பூ, சிம்ரன் என யாருமே சிம்புவை பற்றி நல்லதாவே சொல்லலியே என்று குழம்பினாராம். இதனையடுத்து அவர் சிம்புவுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டாராம். வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஆரம்பித்த காதல் அந்தப் படங்கள் முடிந்து வெளிவருவதற்குள் காதல் முடிந்துவிட்டதே என்பதுதான் லேட்டஸ்ட் டாக்.

Comments