28th of September 2013
சென்னை::இன்னும் பூமிகாவை நினைவில் வைத்துக் கொண்டு கால்ஷீட் கேட்டு
வருகிறார்கள் தமிழ்ப்பட இயக்குனர்கள் சிலர். இப்போதும் தெலுங்கில் சிற்சில
படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் அவரும். சினிமா வியாபாரம் பெருக பெருக
சிக்கல்கள் குறையும் என்பதால், ஒரு படத்திற்கு ஹீரோயின் புக் பண்ண போகும் போதே அவர்
தெலுங்கு ஏரியாவுக்கும் பரிச்சயமானவராக இருக்கட்டும் என்று நினைக்கிறார்கள். அந்த
நம்பிக்கை இருப்பதால்தான் பூமிகா போன்ற நடிகைகளுக்கு இன்னும் கிரேஸ் இருக்கிறது.
சரி, இவ்வளவு துரம் தன்னை தேடி வரும் இயக்குனர்களுக்கு என்ன பதில்
சொல்கிறாராம் அவர்? தமிழில் நான் நடித்த களவாடிய பொழுதுகள் படம் இன்னும் வரவில்லை.
பிரபுதேவா, தங்கர்பச்சான் இவர்களை விட நான் அந்த படத்தை அதிகம்
எதிர்பார்த்திருக்கிறேன். என்னுடைய நடிப்பு அந்தளவுக்கு பேசப்படுகிற படமாக அது
இருக்கும். அதற்கப்புறம்தான் நான் தமிழில் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளும்
ஐடியாவில் இருக்கிறேன் என்கிறாராம். இந்த படம் வரும்போது வரட்டும் என்று
புதுப்படங்களை ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே? அதிலென்ன தயக்கம்? இதை நேரடியாக கேட்க
முடியாமல் திரும்பிவிடுகிறார்களாம் நம்பிக்கையோடு சென்றவர்கள்.
Comments
Post a Comment