பட வாய்ப்பில்லாமல் விரக்தியில் இருக்கும் சதா, புதுபட வாய்ப்புகளுக்காக கிளாமர் தூக்கலாக நடிக்க ஓகே!!!
5th of September 2013
சென்னை::பட வாய்ப்பில்லாமல் விரக்தியில் இருக்கும் சதா, புதுபட வாய்ப்புகளுக்காக கிளாமர் தூக்கலாக நடிக்க ஓகே சொல்கிறார். ஜெயம் படத்தில் அறிமுகமானார் சதா. தொடர்ந்து வர்ண ஜாலம், அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட படங்களில் நடித்த சதா, டாப் இடத்தை பிடித்துவிடலாம் என்று எண்ணினார். இந்நிலையில் சமந்தா, தமன்னா, டாப்ஸி, காஜல் அகர்வால் போன்ற இளம் நடிகைகளின் அதிரடி வரவால் அவரது கனவு தகர்ந்தது.
கோலிவுட்டில் இல்லாவிட்டாலும் டோலிவுட், பாலிவுட்டில் தனக்கென இடத்தை பிடிக்கலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டார். இதுவும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் புலிவால் என்ற படம் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். எதிர்பார்த்த வெற்றி இல்லாததால் மீண்டும் வீட்டுக்குள் முடங்கினார் சதா. விரக்தியில் இருந்தவருக்கு சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் மத கஜ ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு வந்தது. அதை ஒப்புக்கொண்டார்.
இதேபடம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி ரிலீஸ் ஆகிறது. இந்த பாடலில் கவர்ச்சி தூக்கலாக நடித்திருக்கும் சதா இப்படத்துக்கு பிறகு தன் மீது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை விழும், பட வாய்ப்புகள் தேடி வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறாராம் -
Comments
Post a Comment