18th of September 2013
சென்னை::சில்வஸ்டர் ஸ்டாலோன் படத்தால் பிரபுதேவா இயக்கும் இந்திப் படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ராமையா வஸ்தாவையா படத்துக்குப் பிறகு பிரபுதேவா இயக்கி வரும் படம் ராம்போ ராஜ்குமார். ஷாகித் கபூர் நடிக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் விரைவில் திரைக்கு வர உள்ளது.
ராம்போ ராஜ்குமார் என்ற பெயரில் தமிழில் ஸ்டன்ட் மாஸ்டர் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவரை மனதில் வைத்தே இந்தப் பெயரை பிரபுதேவா படத்துக்கு வைத்திருந்தார்.
இந்நிலையில் ராம்போ என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ஹாலிவுட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. சில்வஸ்டர் ஸ்டாலோன் 1982 ல் டேவிட் மோரலின் பர்ஸ்ட்பிளட் நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்ட படத்தில் ஜான் ராம்போ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
Comments
Post a Comment