அனுஷ்காவின் காதலை பற்றி: காதல் தோல்விகள் ரகசியம்!!!


25th of September 2013
சென்னை::மற்ற ஹீரோயின்களை போல் அனுஷ்காவின் காதலை பற்றி அதிகம் செய்திகள் வந்ததில்லை.

ஆரம்பத்தில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் அவர் நெருக்கமாக இருந்தது பற்றி நிறைய தகவல்கள் வந்தது. அந்த காதல் தோற்ற பிறகு அனுஷ்கா வுக்கு மேலும் 2 முறை காதல் வந்ததும் அது தோல்வியில் முடிந்ததும் ரகசியமாகவே இருந்தது.

தமிழில் ´ரெண்டு´ படத்தில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவிலேயே செட்டில் ஆகியிருந்தார் அனுஷ்கா. அப்போதுதான் அந்த ஒளிப்பதிவாளரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் நெருங்கி பழகியவர், காதல் வசப்பட்டார்.

சினிமா உலகை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன் என்றும் அனுஷ்காவே தனக்கு நெருங்கிய சிலரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ´வானம்´ பட இயக்குனர் கிரீஷுடன் அவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

இந்த நெருங்கிய நட்பிலும் சில மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டது. ஒளிப்பதிவாளருடன் காதல் தோல்விக்கு திருமணத்தை அனுஷ்கா தள்ளிப்போட்டதே காரணமாம். கிரிஷுடன் காதல் தோல்விக்கு ஈகோ பிரச்னை காரணமாக கூறப்படுகிறது.

Comments