30th of September 2013
சென்னை::சென்னை::ஆணானப்பட்ட அசின் என்று சொல்ல முடியாது. ஒரு பேச்சுக்கு பெருமையாக வைத்துக் கொண்டாலும் அவரே மும்பையில் அபார்ட்மென்ட்தான் வாங்கியிருக்கிறார். மும்பை பம்பாயாக இருந்த காலத்திலிருந்தே அங்கு வசிக்கும் நதியா கூட அபார்ட்மென்ட் வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜோதிகாவின் அக்கா நக்மா தொடங்கி, கமல் மகள் அக்ஷரா ஸ்ருதி வரைக்கும் அபார்டமென்ட் வாழ்க்கைதான் அங்கு போனால். எல்லாம் ஒரு சேஃப்டிக்குதான். ஆனால் நேற்று சினிமாவுக்கு வந்த நீது சந்திராவுக்கு மும்பையில் அபார்ட்மென்ட் வாழ்க்கை பிடிக்கவில்லையாம். அதற்காக என்ன செய்தார்?
மும்பையின் புறநகரில் ஐந்து ஏக்கரில் நிலம் வாங்கிவிட்டார். இதில் வீடு மட்டுமல்ல, விவசாயத்தையும் ஒரு கை பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறாராம். ஆதிபகவன் படத்தில் வாழ வழியில்லாமல் அவர் பாங்காக் போயிருந்த கதைதான் இப்போது தேவையில்லாமல் நினைவுக்கு வரும். இருந்தாலும் ரசிகர்களே, நீதுவின் விவசாய வாழ்க்கையை ஆசிர்வதியுங்கள்...

Comments
Post a Comment