30th of September 2013
சென்னை::தனுஷின் நய்யாண்டி படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் பரிந்துரைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் நய்யாண்டி. இதில் நஸ்ரியா நசீன் முதன் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களின் வெற்றி இயக்குனர் சற்குணம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
குத்துவிளக்கு செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோவிற்கும், பல் மருத்துவம் படிக்கும் ஹீரோயினுக்கும் இடையில் ஏற்படும் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் ‘நய்யாண்டி’. படத்தை வரும் 10ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனிடையே நய்யாண்டி படம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இதனை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் எவ்வித கட் செய்யாமல் அனைவரும் பார்த்து மகிழும்படியான யு சான்றிதழை வழங்கியுள்ளது. இதனையடுத்து படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட படக்குழு தயாராகி வருகின்றனர்.
Comments
Post a Comment