8th of September 2013
சென்னை::தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சிங்கம்-2, தீயா வேலை செய்யணும் குமாரு படம் ஹிட்டாகியுள்ளது. தற்போது பிரியாணி, வேட்டை மன்னன், வாலு உள்ளிட்ட கைநிறைய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹன்சிகாவுக்கு அதிர்ஷ்ட தேவதை எனும் புதிய பட்டத்தை கொடுத்து, திரையுலக பிரமுகர்கள் அப்படியே அழைக்க தொடங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படங்கள் ஹிட்டானது தானாம்.
இதுகுறித்து ஹன்சிகா கூறியுள்ளதாவது, ‘‘இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னை பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் போது அதை இரண்டு கைகளாலும் பற்றி கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான். ஒரு நடிகையாக மழை வெயில் என பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை, நல்ல தயாரிப்பு நிறுவனம், நல்ல இயக்குனர் என தேர்ந்து எடுப்பதும், என் பல பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன்.
இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும், ஊக்கமும் என் வெற்றியை உறுதி செய்கிறது. இவை எல்லாவற்றையும் விட நான் தத்து எடுக்கும் குழந்தைகளின் மூலம் எனக்கு கிடைக்கும் ஆசியும் எனக்கு இந்த பட்டதை அளித்து இருக்கலாம்’’ என புன்னகையோடு கூறுகிறார் ஹன்சிகா.
Comments
Post a Comment