ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லவ்வரோடு வருகிறேனா? மிருத்திகா ஷாக்!!!

18th of September 2013
சென்னை::என் பேருக்கு ரொம்ப மிருதுவானவள்னு அர்த்தம். பேருக்கு ஏற்ற மாதிரி நான் ரொம்ப சாஃப்ட் டைப். யாராவது சத்தமா பேசினா கூட என்னால தாங்க முடியாது’’ என்கிறார் மிருத்திகா. ‘555’ என்கிற ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தின் ஹீரோயின். ‘‘கேரளாதான் சொந்த ஊர். அமெரிக்காவுல செட்டிலாயிட்டோம். அப்பா, அம்மா, 9வது படிக்கிற ஒரு தம்பி இருக்காங்க. யாருக்கும் சினிமா ஆசை கிடையாது. அங்கே நடனம் கத்துக்கிட்டு, நிறைய நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கேன். இப்ப சினிமாவுக்காக கோழிக்கோட்டுல சொந்தக்காரங்க வீட்டுல தங்கியிருக்கேன்’’ என்கிறார்
மிருத்திகா.

‘555’ வாய்ப்பு எப்படி?
கேரளாவுல நடந்த நடன நிகழ்ச்சியில் பிரமாதமா ஆடினேன். மலையாள டி.வி சேனல்ல என் டான்ஸ் நிகழ்ச்சி நடந்தது. அதை கேள்விப்பட்ட இயக்குநர் சசி, ‘555’ படத்தோட ஆடிஷனுக்கு வரவழைச்சு, மேக்கப் டெஸ்ட் எடுத்தார். ரொம்ப திருப்தி. எனக்கும் சினிமா என்ட்ரி நல்லபடியா அமைந்தது.

பிரபு சாலமன் நடிக்க கேட்டாராமே?
ஆமா. ‘555’ ஆடியோ விழாவில் என்னைப் பார்த்த பிரபு சாலமன், அவர் படத்துல நடிக்க கேட்டார். அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமா இருப்பேன்னும் சொன்னார். ஆனா, அவர் கேட்ட தேதிகளை என்னால கொடுக்க முடியலை. அதனால அவர் படத்துல நடிக்க முடியாம போச்சு.

மற்ற மொழிகளில் நடிக்கலையா?
தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிக்க நிறைய வாய்ப்பு வருது. இப்ப அமீர் ஜோடியா ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ படத்துல நடிக்கிறேன். இதுல எனக்கு நல்ல கேரக்டர். தமிழ்ல நிறைய படங்களில் நடிக்க காத்துகிட்டிருக்கேன். இந்த நேரத்துல மற்ற மொழியில் நடிக்க ஆரம்பிச்சா, இங்க இடைவெளி ஏற்படும். அதுக்காகத்தான் மற்ற மொழி படங்களை ஏத்துக்கலை.

கிளாமர் பண்ணுவீங்களா?
ம்ஹூம். என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிற கேரக்டர்ல மட்டும்தான் நடிப்பேன். காரணம், என் உடல்வாகு. நடிப்பு விஷயத்தில் எனக்கு ரோல் மாடல் ரேவதி, நதியா, ஷாலினி. அவங்க வழிதான் என்வழி. அவங்க நடிச்ச மாதிரியான கேரக்டர்கள்ல நடிப்பேன்.

தமிழ்ல மலையாள நடிகைகள் ஆதிக்கம். அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?
தமிழ் ரசிகர்கள் எல்லோரையும் ஆராதிக்கிறவங்க. சிறப்பா நடிக்கிறவங்க எங்க இருந்து வந்தா என்ன? கேரளாவுல இருந்து வந்த அசின், நயன்தாரா, அமலா பால், லட்சுமி மேனன், நஸ்ரியா நாசிம்னு எல்லாருமே சிறப்பான நடிகைகள்தான். எனக்கும் முதல் படத்துல அங்கீகாரம் கிடைச்சிருக்கு.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லவ்வரோடு வர்றதா சொல்றாங்களே?
நிறையபேர் இதைக் கேட்டுட்டாங்க. எனக்கு காதலன் கிடையாது. இதுவரை யாரையும் காதலிக்கவும் இல்லை. இதுதான் உண்மை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என் பாட்டியும் அத்தையும் வந்திருந்தாங்க. நீங்க சொல்ற மாதிரி காதலன் யாரும் வரலை.

அப்ப... மேரேஜ்?
இப்பதான் நடிக்கவே வந்திருக்கேன். அதுக்குள்ள கல்யாணமா? அதைப்பற்றி யோசிக்க  நேரம் இல்லை. இப்போதைக்கு நடிக்கணும். அவ்வளவுதான்.

Comments