10th of September 2013
சென்னை::புதுவரவு நடிகைகளில், ‘கும்கி’ லட்சுமி மேனன்தான் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். ஏற்கனவே, ‘பாண்டியநாடு, ஜிகர்தண்டா, மஞ்சப்பை, சிப்பாய்’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும் அவரை, அடுத்து மேலும், சில முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்காகவும் பேசிக் கொண்டு இருக்கின்றனராம்.
அதுபற்றி விசாரித்தபோது, கார்த்தி நடிக்கும் படம் மற்றும் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், ஆகியவற்றுக்கு லட்சுமிமேனனைதான் ஹீரோயினாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதனால், ஏக குஷியில் இருக்கும் லட்சுமிமேனன், தன்னைப் போலவே, கேரளத்தில் இருந்து வந்து கோலிவுட் கோதாவில் குதித்துள்ள, ‘நேரம்’ நஸ்ரியா நசீமை முந்திச் சென்று கோலிவுட் டாப் 10ல் முதலிடத்தை கைப்பற்றி விட வேண்டுமென்று தீவிரம் காட்டுகிறாராம்.
Comments
Post a Comment