போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை – சிவகார்த்திகேயன்!!!

2nd of September 2013
சென்னை::சிவகார்த்திகேயன், புதுமுகம் ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தினை திரைக்கு வருவதற்கு முன்பாகவே பிரபலப்படுத்த சிவகார்த்திகேயன் ஊர் ஊராக சுற்றி வருகிறார்.
 
இன்று காலை சேலம், ஏஆர்ஆர்எஸ் திரையரங்கிற்க சிவகார்த்திகேயன் வந்தார். ரசிகர்கள் முன் பாடி ஆடினார்.
 
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது,
காசு கொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்
க்க வரும் மக்களை அழ வைக்காமல் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை மட்டுமே கொடுப்பேன்.
 
டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்து நான் வெற்றி பெற்றதற்கு காரணம், நல்ல கதையும், இயக்குனர்களும்தான். இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்வேன்.
 
எனக்கு ரோல் மாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அமைதியான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதும் எனது ஆசை, ” என்றார்.
சீரியஸா நடிச்சா உங்களுக்கும் பிடிக்காது, எங்களுக்கும் பிடிக்காது.
அப்ப ‘சிரிப்பு போலீஸ்’ மாதிரிதான நடிப்பீங்க…

Comments