காமெடிப் படங்களை இயக்கியதால் சுந்தர்.சிக்குப் போரடித்து விட்டதாம்: சுந்தர்.சி!!!

7th of September 2013
சென்னை::காமெடிப் படங்களை இயக்கியதால் சுந்தர்.சிக்குப் போரடித்து விட்டதாம். காதல், காமெடி, சென்டிமென்ட் தவிர இன்னொரு புது ஜானரில் படம் எடுக்கலாம் என்று யோசித்திருக்கிறார்.
 
பேய்ப் படங்களுக்கு இப்போது தனி க்ரேஸ் இருப்பதால் அடுத்து ஒரு பேய்ப் படம் இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சுந்தர்.சி
 
ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ மாதிரி பேய்ப் படம் இயக்கும் ஆசை அப்படியே சுந்தர்.சிக்கு ஒட்டிக்கொண்டது. இதனால் தான் இயக்கும் புதிய படத்தில் பேய் வசிக்கும் அரண்மனையில் பல திகீர் சம்பவங்கள் நடப்பதுபோல் கதையை நகர்த்துக்கிறாராம்.
 
படத்துக்கு ‘அரண்மனை’ என்ற டைட்டில் வைத்திருக்கும் சுந்தர்.சி இப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக அரிதாரம் பூசுகிறார். இன்னொரு ஹீரோவாக வினய்யும் நடிக்கிறார்.
 
ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என்று மூன்று அழகான ராட்சசிகளும் இதில் நடிக்கின்றனர்

Comments