கவர்ச்சி ஒகே, ஆபாசத்துக்கு நோ - மகிமாவின் மகத்தான கொள்கை!!!

16th of September 2013
சென்னை::சாட்டை படத்தில் பள்ளி மாணவி வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மகிமா. கேரளத்து வரவான மகிமாவுக்கு தற்போது வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வெற்றி கொடி கட்டி பறக்கும் கேரளத்து நாயகிகள் பட்டியலில் தானும் இடம்பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மகிமாவை சில நிமிடங்கள் சந்தித்த போது, அவர் நம்மிடம் பகிந்துகொண்டவை இதோ!

மகிமா யார் ? எப்படி சினிமா ஆர்வம் வந்தது?

நான் கேரளாவை சேர்ந்தவள் ஆனால் அப்பா சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ரயில்வேயில் வேலை பார்த்திருக்கிறார் அதன் பிறகு கேரளா சென்று விட்டோம் அம்மா அங்கே டீச்சரா இருக்காங்க. டீச்சர் பிள்ளை மக்குன்னு சொல்லுவாங்க அது பொய் சார்! நான் நேர் மாறா எல்லா சப்ஜெக்டிலும் நூறை நெருங்கி நம்பர் ஒன் மாணவி.

படிக்கும் போதே நடிப்பு மீது கொஞ்சம் கொஞ்சமாக ஆசை அம்மா கிட்ட சொன்னேன் மறுக்க வில்லை என் போடோ மாடல் கோ ஆர்டிநேட்டர் மூலம் பிரபுசாலமன் , ஜான் மேக்ஸ் ,இயக்குனர் அன்பழன் கைக்கு கிடைத்தது சாட்டை மூலம் நாயகியானேன்.

நடிகைன்னாலே போட்டி அதிகம் இருக்கும்! போட்டியில் ஜெயிக்க கவர்ச்சி என்கின்ற ஆயுதம் தான் நடிகைகளின் கொள்கை!அதுபற்றி ...

கவர்ச்சியை வைத்துக் கொண்டு மட்டும் காலத்தை ஓட்ட முடியாது ஒரு கட்டத்தில் கவர்ச்சி ரசிகர்களுக்கு போரடித்து விட்டால் தூக்கி எரிந்து விடுவார்கள் கதைக்கு தேவைப் படும் அளவிற்கு கவர்ச்சி தவறில்லை, நான் எப்போதும் ஆபாசம் என்கிற ஆயுதத்தை போட்டிக்காக எடுக்க மாட்டேன்.

இப்பொழுது நடித்து வரும் படங்கள் பற்றி?

'சாட்டை' படத் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் தயாரிக்க எம்.ஜீவன் இயக்கும் 'மொசக்குட்டி'. விஜய் வசந்த் ஜோடியாக பி.ராஜபாண்டியன் இயக்கும் 'என்னமோ நடக்குது' மற்றும் வெங்கட் இயக்கும் 'புறவி150 CC' என்ற படம் என்று மூன்று படங்கள் மற்றும் தெலுங்கில் ஒரு படம் ஒப்பந்தமாகி இருக்கிறது. நான் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும், ஒவ்வெரு பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும்.

இதுவரை தமிழ் நாட்டில் கேரளாவிலிருந்து  வரும் நடிகைகளுக்கு நல்ல மார்கெட் இருந்திருக்கிறது, வரவேற்பு இருக்கிறது அந்த வரிசையில் எனக்கு ஒரு சிம்மாசனம் உங்க மனசுல போடப்படும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்ட மகிமாவுக்கு, நமது சார்பில் வாழ்த்துக்கள்.

Comments