நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்!!!

13th of September 2013
சென்னை::திரைப்பட இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி ஆஜராகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
 
அங்காடி தெரு', "எங்கேயும் எப்போதும்' உள்பட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி.
 
இதற்கிடையே நடிகை அஞ்சலி, அவருடைய சொத்தை நான் அபகரிக்க முயற்சிப்பதாக என் மீது அவதூறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதனால், அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று களஞ்சியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு சைதாப்பேட்டை 17-ஆவது பெருநகர நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஏற்கெனவே ஆஜராகாமல் இருந்த அஞ்சலி வியாழக்கிழமை நடைபெறவிருந்த வழக்கு விசாரணையின்போதும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி ராஜலட்சுமி, அஞ்சலிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Comments