13th of September 2013
சென்னை::இந்தியப் பாரம்பரிய இசை, ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக கஜல் இசைப் பாடல்களில் தேர்ந்து விளங்குபவர் பாடகி சின்மயி ஆவார். இவரும், இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகமும் இணைந்து சமகாலத்திய இனிமையுடன் கூடிய பாரம்பரிய இசைப்பாடல் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னால் இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படத்துறையில் பணியாற்றி உள்ளனர். இப்போது மீண்டும் இந்தப் பாடலுக்காக இணைந்து இசையைத் தேர்வு செய்து பதிவு செய்யும் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றனர்.
இதுகுறித்து தாங்கள் முன்பே யோசித்து வந்ததாகவும், ஆனால் அவரவர் வேலையில் கவனம் செலுத்தியதால் சரியான நேரம் கிட்டவில்லை என்று ரமேஷ் விநாயகம் கூறினார். இப்போது இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பாடல் பாரம்பரிய இசையுடன் சமகாலத்தை ஒத்ததாகவும் இருக்கும் என்றும் கூறினார்.

Comments
Post a Comment