'சென்னை சிட்டி கேங்க்ஸ்டா' பாடல் வீடியோ நாளை வெளியீடு!!!

19th of September 2013
சென்னை::நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் அவரது மனைவி கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் 'வணக்கம் சென்னை' என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பினை அனிருத் ஏற்றுள்ளார்.

இவரது முந்தைய படங்களான '3' மற்றும் 'எதிர்நீச்சல்' பாடல்கள் வெற்றி பெற்றதுபோல் இந்தப் படத்தின் பாடல்களும் சிறப்பாக வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் ஹே, ஒசாகா ஒசாகா, ஓ பெண்ணே, சென்னை சிட்டி கேங்க்ஸ்டா, எங்கடி பொறந்த, ஐலசா ஐலசா என்ற ஆறு பாடல்கள் இசையமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஓ பெண்ணே பாடல் சர்வதேச பதிப்பாகவும் வெளிவருகின்றது. இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி சோனி நிறுவனத்தாரால் நடத்தப்பட்டது. தற்போது சென்னை சிட்டி கேங்க்ஸ்டா பாடலின் வீடியோ தொகுப்பு நாளை வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
tamil matrimony_INNER_468x60.gif

Comments