10th of September 2013
அஜித்தின் ஆரம்பம் தீபாவளிக்கு வெளியாகிறது. சிம்பு அஜித்தின் தீவிர ஃபேன். தல படத்துடன் நம் படமா...? வேண்டாம், தள்ளி ரிலீஸ் பண்ணலாம் என முடிவெடுத்துள்ளார்.
சென்னை::தீபாவளிக்கு திரைக்கு வர ஒரு டஜன் படங்கள் தயாராக உள்ளது. சுறாக்களுக்கு நடுவில் சிக்கி சின்னாபின்னமாக விருப்பமில்லாமல் அரை டஜன் படங்கள் போட்டியிலிருந்து விலகிவிட்டன.
ஆரம்பம், அழகுராஜா, இரண்டாம் உலகம் என கால் டஜன் படங்கள் தற்போதைய நிலவரப்படி ரேஸில் உள்ளன. இந்தப் படங்களுக்கே சரியான திரையரங்குகள் அமையுமா என்பது தெரியாத நிலையில் மேலும் ஒரு படம் போட்டியில் இணைந்துள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் பாண்டியநாடு படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. படத்தின் டீஸரையும் விஷால் வெளியிட்டுள்ளார். அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டாரி தயாரிப்பாக வரும் முதல் படம் இது. அதனால் தீபாவளிக்கு படத்தை வெளியிடும் முனைப்பில் இருக்கிறார். விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
இந்தப் படங்களுக்கெல்லாம் முன்னால் தீபாவளிக்கு ரிசர்வ் செய்த படம், சிம்புவின் வாலு. வேட்டை மன்னன், வாலு என இரு படங்களிலும் மாற்றி மாற்றி நடித்துவரும் சிம்பு, வாலு படத்தை தீபாவளிக்கு வெளியிடாமல் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார். ஏன்..?
அஜித்தின் ஆரம்பம் தீபாவளிக்கு வெளியாகிறது. சிம்பு அஜித்தின் தீவிர ஃபேன். தல படத்துடன் நம் படமா...? வேண்டாம், தள்ளி ரிலீஸ் பண்ணலாம் என முடிவெடுத்துள்ளார்.
சேஃபான முடிவும்கூட.
Comments
Post a Comment