செல்வராகவன் படத்தில் இருந்து விலகியது ஏன்? ஹாரிஸ் விளக்கம்!!!

29th of September 2013
சென்னை::செல்வராகவன் இயக்கும் படத்திலிருந்து திடீரென்று விலகியது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
 
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் ‘இரண்டாம் உலகம். செல்வராகவன் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. சமீபத்தில் ஷூட்டிங் முடிந்தாலும் இதன் கிராபிக்ஸ் பணி மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் முடியாமல் இருந்தது. படத்தை விரைவில் வெளியிட செல்வராகவன் எண்ணியதால் பின்னணி இசை பணியை விரைந்து முடித்து தரும்படி ஹாரிஸிடம் கேட்டார். ஆனால் அவர் பிற படங்களில் பிஸியாக இருப்பதால் ‘இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசை பணியை உடனடியாக முடிக்க முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தார்.
 
இதனால் பின்னணி இசை பணியை வேறு இசை அமைப்பாளரை வைத்து முடிக்க முடிவு செய்தார். பிறகு அனிரூத்தை ஒப்பந்தம் செய்தார். அவர் பின்னணி இசைக்கான பணிகளை தொடங்கி உள்ளார்.செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் தனது இணைய தள பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார். ‘ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் நிலையில் இருப்பதால் அதற்கான வேலையை முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் உலகம் பின்னணி இசை சேர்ப்பு பணியை உடனடியாக தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால்தான் அப்படத்திலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது‘ என குறிப்பிட்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

Comments