10th of September 2013
சென்னை::தனுஷுடன் நடிக்கப்போவது தெரியாமல், தமிழ் படத்தை ஒப்புக்கொண்டேன் என்றார் பாலிவுட் ஹீரோயின் அமைரா.கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பாலிவுட் நடிகை அமைரா. அவர் கூறியது:
அனேகன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது தனுஷ்தான் ஹீரோ என்பது எனக்கு தெரியாது.
அவர்தான் ஹீரோ என்று தெரிந்தபிறகு திறமையானவருடன் நடிக்கப்போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தேன். இந்தியில் நான் நடித்த ‘இஷ்க் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டுத்தான் என்னை கே.வி.ஆனந்த் ஒப்பந்தம் செய்தார்.
பிறகு சென்னை வந்து மேக்அப் டெஸ்ட் எடுத்தேன். படத்தின் ஒருவரி கதையை சொன்னார். பிடித்திருந்தது. நடிக்க சம்மதித்தேன். நான் இதுவரை தமிழ் உள்ளிட்ட எந்த தென்னிந்திய படத்தையும் பார்த்ததில்லை. இதுபற்றி கேட்ட ஆனந்த், 1980, 90களில் வந்த தமிழ் படங்களை பார்க்கும்படி எனக்கு ஆலோசனை சொன்னார். அந்த காலகட்டத்தையொட்டி கதாபாத்திரம் ஏற்பதால் அந்த வருடத்திய படங்களை பார்க்க சொன்னார். எனது கதாபாத்த¤ரம் என்ன என்பதை என்னால் இப்போதைக்கு சொல்ல முடியாது என்றார்.
Comments
Post a Comment