ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் டீஸர் இன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றது!!!

10th of September 2013
சென்னை::ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் டீஸர் இன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, டப்பிங், ரீரிக்காடிங், மிக்சிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இந்த நிலையில் படத்தின் டீஸர் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என்று கோச்சடையான் டைரக்டர் சவுந்தர்யா அறிவித்து இருந்தார். இன்று காலை 9.30 மணிக்கு டீஸர் வெளியிடப்பட்டது. இதை பார்க்க ரஜினி ரசிகர்கள் இன்டர்நெட் முன்னால் முடங்கி கிடந்தனர்.

டீஸரை பார்த்து அவர்கள் உற்சாகமடைந்தார்கள். ரஜினி புது மாதிரி ஸ்டைலில் கலக்கி இருப்பதாக தெரிவித்தனர். டிரெய்லர் துவக்கத்தில் பிரமாண்ட அரண்மனை காண்பிக்கப்படுகிறது. அதன்பிறகு பெரிய மைதானம் ஒன்றை காட்டுகின்றனர். தொடர்ந்து குதிரை படை வீரர்களுடன் ரஜினி வாளோடு பாய்ந்து வருகிறார். பறந்து சண்டையும் போடுகிறார்.

படை வீரர்களுடன் பிரமாண்ட பாடல் காட்சியிலும் கம்பீரமாக நடந்து வருகிறார். சித்தர் கோலத்தில் காலை உயர்த்தி கையில் பிடிக்கும் சீன் பிரமிக்க வைக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையில் மிரட்டுகிறார். அனிமேஷனில் ரஜினி இளமையாக தெரிகிறார். நடை, நடனங்களில் வசீகர ஸ்டைல். முழுமையான கமர்ஷியல் படமாக தயாராகியுள்ளது.

3 டியில் இப்படம் உருவாகியுள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 25 வயது தோற்றத்தில் ரஜினியை கொண்டு வந்துள்ளனர். தந்தை கேரக்டர் நீண்ட தலை முடியுடன் சிவன் பக்தராக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் 800 தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
நாகேஷ் தோற்றத்திலும், புது கேரக்டர் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடுகின்றனர். ஆங்கிலம், ஜப்பான் மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

கோச்சடையான் மன்னன் வாழ்க்கையை மையமாக வைத்து இதன் கதை பிண்ணப்பட்டு உள்ளது. இதில் கோச்சடையானாக தந்தை வேடத்திலும், இளவரசனாக மகன் வேடத்திலும் இரு வேடங்களில் ரஜினி நடிக்கிறார். தந்தை ரஜினிக்கு துரோகம் செய்யும் எதிரிகளை மகன் ரஜினி வீழ்த்துவதே கதை. தந்தை ரஜினி ஜோடியாக ஷோபனாவும், மகன் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனேயும் நடிக்கின்றனர். சரத்குமார், ஜாக்கிஷெராப், நாசர், ஆதி, ருக்மணி ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

Comments