25th of September 2013
சென்னை::ஆர்யாவும் நயன்தாராவும் 'ராஜாராணி' என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் விளம்பரத்துக்காக இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற போஸ்டர்களை அச்சிட்டு நகரமெங்கும் ஒட்டினர். மோதிரம் மாற்றிக் கொள்வதுபோல் பிரத்யேகமாக திருமண அழைப்பிதழ் ஒன்றையும் அச்சிட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பினர்.
போஸ்டர்களும், அழைப்பிதழும் நயன்தாரா ஆர்யாவுக்கு நிஜமாகவே திருமணம் நடந்துவிட்டதுபோல் ரசிகர்களை நினைக்க வைத்தது. அதன் பிறகு படத்துக்கான விளம்பரம் என்று தாமதமாக தெரிய வந்தது. இருவரையும் எரிச்சல்படுத்தியது. இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள். என விமர்சனங்கள் கிளம்பின.
நயன்தாராவுக்கு தெரியாமல் இந்த திருமண போஸ்டர்களை வெளியிட்டு அவரை அவமதித்து விட்டதாகவும் இதனால் படக்குழுவினர் மேல் நயன்தாரா கோபமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
இதற்கு ஆர்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
நயன்தாரா பிரபலமான நடிகை. எனவே அவரை வைத்து இதுபோல் திருமண போஸ்டர் அச்சிட்டு படத்தை விளம்பரம் செய்ய முடிவெடுத்ததும் நான் தொடர்பு கொண்டு அபிப்ராயம் கேட்டேன். ரசிகர்கள் உங்களுக்கு நிறைய உள்ளனர். நான் ஆண் என்பதால் பிரச்சினை இல்லை. உங்களுக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது. யோசனை பண்ணி முடிவை சொல்லுங்கள் என்றேன். நயன்தாரா மறுக்கவில்லை. படத்துக்குத்தானே செய்றீங்க என்று சம்மதம் சொன்னார். நயன்தாரா அனுமதி இல்லாமல் அந்த காரியத்தை செய்யவில்லை.
நயன்தாராவையும் என்னையும் இணைத்து வதந்திகள் பரவுகின்றன. சினிமாவில் எல்லோரும் நண்பர்களாகவே பழகுகிறோம். அதை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு ஆர்யா கூறினார்.
Comments
Post a Comment