16th of September 2013
சென்னை::நீச்சல் உடையில் நடித்ததாக வதந்தி பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கோபமாக கூறினார் சமந்தா.
நான் ஈ, ‘நீ தானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதுதவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். கைநிறைய படங்கள் வைத்திருந்தாலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
விரைவில் வரவிருக்கும் படமொன்றில் சமந்தா நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக தகவல் பரவியது.இதையடுத்து அவரது இணையதள பக்கத்தில் ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்து மெசேஜ் அனுப்பினர். அதைப்பார்த்து ஷாக் ஆன சமந்தா, தன்னைப்பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது கோபம் அடைந்தார். அந்த கோபத்தை தனது இணையதள பக்கத்திலும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
நான் நடித்த படங்களை நீங்கள் பார்த்திருந்தால் நீச்சல் உடையில் நடித்திருப்பதாக வந்த வதந்தியை என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள். இதுபோல் வதந்தி பரப்புபவர்கள் அதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment