11th of September 2013
சென்னை::தற்கொலை முயற்சி செய்ததாக வந்த தகவலால் நடிகை சிந்து மேனன் அதிர்ச்சி அடைந்தார். ‘
சமுத்திரம்', ‘கடல் பூக்கள்', ‘ஈரம்' படங்களில் நடித்தவர் சிந்து மேனன். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. தற்போது படங்களில் நடிக்கவில்லை. மலையாள பெண்ணாக இருந்தாலும் கர்நாடகாவில் பிறந்தவர். சமீபத்தில் இவர் தற்கொலை முயற்சி செய்ததாக தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது.
சொந்த படம் தயாரிக்க கடன் வாங்கியதாகவும் அதை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் பேசப்பட்டது. இதுபற்றி கூறிய சிந்து மேனன், தான் யாரிடமும் கடன் வாங்கவில்லை என்றும் தற்கொலைக்கு முயலவில்லை என்றும் கூறி உள்ளார்.
இதற்கிடையில் ‘பரதேசி' உள்ளிட்ட படங்களில் நடித்த துணை நடிகை சிந்து என்பவர் சொந்த படம் தயாரிக்க கடன் வாங்கி கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியதால் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இவருக்கு பதிலாக ஹீரோயின் சிந்து மேனன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியதால் குழப்பம் ஏற்பட்டதாக திரையுலகினர் கூறுகின்றனர்.
Comments
Post a Comment