தனுஷ் ப்ரெண்ட்ஷிப் எங்க போய் முடியுமோ..? : கலக்கத்தில் சிவகார்த்திகேயன்!!!

19th of September 2013
சென்னை::படிப்பிடிப்பிலும், நடிப்பிலும் ஒருபடி மேலே போய் 4 படங்கள் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்த பின்னும் இப்போதும் தனுஷ் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு அவரது ‘அன்புப்பிடி’யில் சிக்கித் தவிக்கிறாராம் சிவகார்த்திகேயன்..

பாண்டிராஜ் டைரக்‌ஷனில் ரிலீஸான ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.மெரினா’ படத்துக்குக் கிடைத்த திடீர் ரெஸ்பான்ஸை தொடர்ந்து ‘மனம் கொத்திப் பறவை’, ‘எதிர்நீச்சல்’, கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என வரிசையாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்து வருகிறார்.

சினிமாவுக்கு எந்தவித பின்புலமும் இல்லாமல் வந்த சிவகார்த்திகேயனுக்கு ’3′ படத்தில் இணைந்து நடித்தபோது தனுஷுன் ஃப்ரெண்ட்ஷிப் கிடைத்தது. அந்த நட்பே சிவகார்த்திகேயனை ஹீரோவாகப் போட்டு தனுஷ் சொந்தப்படம் தயாரிக்கும் அளவுக்கு கெட்டியாகிப் போனது.

எனக்கு ஒரு தம்பி இல்லேங்கிற ஏக்கம் எப்போதுமே எனக்கு இருக்கும், சிவகார்த்திகேயனை பார்க்கும் போது எனக்கு தம்பி மாதிரி தெரியிறார் ‘ என்று இப்போதும் கூட தனுஷ் பெருமையாக சொல்லுவார்.

சிவகார்த்திகேயனும் தனுஷ் தான் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணம் என்று அவருடைய ஃப்ரெண்ட்ஷிப்பை மட்டும் விடாமல் கண்டினியூவ் செய்து வருகிறாராம்.

அந்த ஃப்ரெண்ஷிப் இப்போது இன்னும் ஆழமாகி மூழ்காத ஷிப்பாகி விட்டதாம். ஆமாம் சமீபகாலமாக தான் கமிட்டாகும் புதுப்படத்தின் ஸ்டோரி, சம்பளம் உட்பட எல்லா சமாச்சாரங்களுக்கும் தனுஷிடம்தான் டிப்ஸ் கேட்கிறாராம் சிவகார்த்திகேயன். அவனின்றி எதுவும் அசையாது என்று சொல்வது போல தனுஷ் ஓ.கே சொன்னால் தான் ஒரு படத்தை கமிட் செய்வது அல்லது ரிஜெக்ட் செய்வது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கிறாராம்.

இது இப்போதைக்கு நல்லதாக இருந்தாலும் இந்த ஓவராக சகவாசம் என்றாவது ஒருநாள் கொஞ்சம் ஓவராகிப்போய்விடுமோ..? என்ற பயத்திலும் தனுஷுடன் ஃப்ரெண்ட்ஷிப்பை தொடர்கிறார் சிவகார்த்திகேயன்.
மருந்தும், விருந்தும் மூணே நாள் தான் சார் தாக்குப் பிடிக்கும்.

Comments