நடிகர்-நடிகைகளின் சம்பளம். எவ்வளவு என்று பார்ப்போமா?!!!

rajini1

பெட்ரோல், டீசல், பால், பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் என எல்லாமே சகட்டுமேனிக்கு உயர்ந்துகொண்டே போவதுபோல, இன்னொன்றும் சத்தமில்லாமல் உயர்ந்துகொண்டே இருக்கும். அது நடிகர்-நடிகைகளின் சம்பளம். எவ்வளவு என்று பார்ப்போமா?
 
ரஜினி
‘எந்திரன்’ படத்துக்காக 23 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ‘கோச்சடையான்’ சம்பளம் பேசவில்லை. படத் தின் பிசினஸில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் ரஜினிக்குப் போய்விடும். அடுத்து நடிக்கும் படத்துக்கு ரஜினி சம்பளம் டிமாண்ட் எதுவும் செய்யவில்லை. ஆனாலும், ‘எந்திரன்’ சம்பளத்தைப் போல இரண்டு மடங்கு தருவதாக கால்ஷீட் கேட்டுக் காத்திருக்கிறது ஏ.ஜி.எஸ் நிறுவனம்.
கமல்
‘தசாவதாரம்’ படத்துக்கு 10 கோடி சம்பளம். அதன் பின் வெளி பேனரில் கமல் நடிக்கவில்லை. ‘உன்னைப்போல் ஒருவன்’ ‘விஸ்வரூபம்’ என சொந்தமாகப் படத்தை தயாரித்து நடித்தார். ‘விஸ்வரூபம்’ ஹிட்டுக்கு அடுத்து 25 கோடி சம்பளம் கேட்பதாகச் சொல்கிறார்கள்.
விஜய்
‘துப்பாக்கி’க்கு 11 கோடி, ‘தலைவா’வுக்கு 14 கோடி, ‘ஜில்லா’வுக்கு 15 கோடி. இதுதான் விஜய்யின் இப்போதைய சம்பள கிராஃப். அடுத்த வருடம் நடிக்கப்போகும் முருகதாஸ் படத்துக்கான சம்பளம் 18 கோடி ரூபாய் என்று பேச்சு.

surya
அஜித்
‘பில்லா-2’ படத்துக்கு 12 கோடி. நலிந்துபோன தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேனரில் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்துவரும் ‘வலை’ படத்துக்கு கறாராக சம்பளம் எதுவும் அஜித் கேட்க வில்லை. அடுத்து ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்கு அஜித்தின் சம்பளம் 18 கோடி.
 
சூர்யா
புதுசாக படத்துக்கு ஒப்பந்தம் செய்யும்போதே சம்பளத்தோடு சேர்த்து தெலுங்கு உரிமையையும் வாங்கிக்கொள்வது சூர்யாவின் வழக்கம். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த ‘மாற்றான்’ படத்துக்கான சம்பளம் ஏழு கோடி, தெலுங்கு உரிமையைப் பெற்று ஆந்திராவில் ‘மாற்றான்’ படத்தை 16 கோடிக்கு விற்றார். ஆக மொத்தம் 23 கோடி சம்பளம்!
 
விக்ரம்
‘தாண்டவம்’ படத்துக்கு 12 கோடி. சமீப காலமாக நடித்துவரும் படங்கள் பெரிதாகப் போகவில்லை. ஆனாலும் ஷங்கரின் ‘ஐ’ படத்துக்கு 11 கோடி சம்பளம்.
visal1

சிம்பு
‘போடா போடி’ படத்துக்கு வாங்கிய சம்பளம் ஆறு கோடி. தற்போது நடித்துவரும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படத்துக்கான சம்பளம் ஏழு கோடி.
 
தனுஷ்
தனுஷ் நல்ல படம் என்றால் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளவும் ரெடியாக இருப்பார். ‘மரியான்’ படத்துக்கு தனுஷின் சம்பளம் ஏழு கோடி. அடுத்து சற்குணம் இயக்கத்தில் நடிக்கப்போகும் ‘நையாண்டி’ படத்துக்கு ஏழு கோடி.
 
ஜீவா
‘நீதானே பொன்வசந்தம்’ படத்துக்கு ஜீவாவுக்கு மூன்று கோடி சம்பளம் கொடுத்தார் கௌதம் மேனன். அடுத்ததாக வினயன் இயக்கும் படத்துக்கு ஆறு கோடி ரூபாய் கேட்டிருக்கிறார் ஜீவா.
 
ஜெயம் ரவி
இன்டஸ்ட்ரியில் சம்பளம் விஷயத்தில் கொஞ்சம் பின்வரிசையில் ஜெயம் ரவிதான். மூன்று வருடத்துக்கு முன்னாடி ஒப்பந்தமான படம் ‘ஆதிபகவன்’. அதில் ஜெயம் ரவிக்கு மூன்று கோடி சம்பளம் கொடுத்தார் கள். மூன்று வருடங்களாக வேறு எந்தப் படமும் நடிக்காமல் இருந்ததால், ரேட்டை ஏற்ற முடியவில்லை. தற்போது நடித்துவரும் ‘பூலோகம்’ படத்துக்கு ஆஸ்கார் பிலிம்ஸ் கொடுக்கிற சம்பளம் நாலரைக் கோடி.
nayanthara

விஷால்
சூர்யாவைப் போலவே சம்பளத்தோடு சேர்த்து நடிக்கும் படங்களின் தெலுங்கு உரிமையையும் வாங்கிவிடுவார் விஷால். ஆந்திராவில் தெலுங்கு உரிமையை மூன்று கோடி ரூபாய்க்கு விற்றுவிடுவார். தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும் ‘பட்டத்து யானை’ படத்துக்காக ஐந்து கோடி ப்ளஸ் தெலுங்கு ரைட் ஸைக் கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். ஆக மொத்தம் சம்பளம் எட்டுக் கோடி ரூபாய்!
 
ஆர்யா
‘நான் கடவுள்’ படத்துக்கு முன் லட்சத்தில் இருந்த ஆர்யாவின் சம்பளம் அதற்குப் பின்தான் கோடியில் எகிறியது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டு கோடியைத் தொட்டவர், ‘வேட்டை’க்கு மூன்றை எட்டிவிட்டார். தற்போது நடிக்கும் ‘சேட்டை’ பட சம்பளம் நான்கரைக் கோடி.
 
கார்த்தி
ஆரம்பத்தில் முதல் மூன்று படங்களில் மட்டுமே வெளி பேனரில் நடித்தார். அதன்பின் சொந்த நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் மட்டுமே நடித்துவருகிறார். கடைசியாக ஒரு தயாரிப்பாளரிடம் கால்ஷீட் கேட்டபோது ஏழு கோடி ப்ளஸ் தெலுங்கு ரைட்ஸ் கேட்டிருக்கிறார். தெலுங்கில் கார்த்திக்கு ஆறு கோடி பிஸினஸ் ஆகிறது. ஆகமொத்தம் 13 கோடி.
kajalagarwal

விஜய் சேதுபதி
ஆரம்பத்தில் ‘தென்கிழக்கு பருவக் காற்று’ படத்தில் ஆயிரங்களில் வாங்கிய விஜய் சேதுபதி, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்காக எட்டு லட்சம் சம்பளம் கேட்டார். விஜய் சேதுபதி தற்போது கேட்க ஆரம்பித்திருப்பது ஒன்றேகால் கோடி!
 
நயன்தாரா
எத்தனை நடிகரோடு கிசு கிசுக்கப்பட்டாலும் டாப் லெவலில் இருப்பது நயன்தாராவே. தெலுங்கில் ஒன்றரைக் கோடி சம்பளம் வாங்கும் நயனுக்கு ‘இது கதிர்வேலன் காதல்’ படத்துக்காக உதயநிதி தாரை வார்த்திருப்பது இரண்டு கோடி!
 
அனுஷ்கா
‘அருந்ததி’ ஹிட்டை அடுத்து, தமிழ், தெலுங்குப் படத்தில் நடிக்க தலா ஒன்றரைக் கோடி வாங்குகிறார். சூர்யாவுடன் ‘சிங்கம்-2’ ப்ளஸ் கார்த்தியுடன் ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்று இரண்டு படங்களுக்கான பேக்கேஜ் பேமன்ட் 2 கோடியே 20 லட்சம்!
 
த்ரிஷா
நீண்ட வருடங்களாக நிலைத்து நின்றாலும் த்ரிஷா கேட்பது லட்சங்களில்தான். சமீபத்தில் தமிழில் நடித்த ‘சமர்’ படத்துக்கு 60 லட்சம் சம்பளம் வாங்கினார். தெலுங்கில் ‘சம்திங்… சம்திங்’ படத்தின் மூலம் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் ராஜுவின் அடுத்த படத்துக்கு நன்றி உணர்வோடு சில லட்சங்களே சம்பளமாக வாங்கியிருக்கிறார் த்ரிஷா.
 
காஜல்
‘துப்பாக்கி’ படத்துக்கு 70 லட்சம் சம்பளம் வாங்கிய காஜல், அதன் வெற்றிக்குப் பின்னர் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் ஒரு கோடி கேட்கிறார். தன்னை வாழவைத்த தெலுங்குப் பட உலகத்துக்கு மட்டும் சம்பளத்தில் சலுகை உண்டு.
 
தமன்னா
தமிழில் கைவசம் படங்கள் இல்லை என்றாலும், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் அஜித் படத்திற்கு 70 லட்சம் சம்பளம் கேட்டிருக்கிறார்.
anjali

சமந்தா
‘நீதானே பொன்வசந்தம்’ பெரிதாக ஜெயிக்கவில்லை. இருந்தும் சமந்தா மீதான கிரேஸ் குறையவில்லை. கோடி கொடுக்க தயாரிப்பாளர்கள் இருந்தாலும் தமிழில் நடிக்க அழைத்தால் கொடுக்க மேடத்திடம் கால்ஷீட் இல்லை.
 
ஸ்ருதி
இந்தியில் அறிமுகம் ஆன ‘லக்’, தமிழில் அறிமுகம் ஆன ‘ஏழாம் அறிவு’ இரண்டுமே ஸ்ருதிக்குச் சரியாகப் போகவில்லை. தெலுங்கு ‘கப்பார் சிங்’ ஹிட் அடித்து தூக்கிவிட்டதில், இப்போது ஒரு கோடி சம்பளம் கேட்கிறார்.
 
அஞ்சலி
தமிழைவிட தெலுங்கில் சம்பளக் கிராக்கி ஜாஸ்தி. தமிழில் 30 லட்சமும், தெலுங்கில் 50 லட்சமும் சம்பளம் கேட்கிறார்.

Comments