28th of September 2013
சென்னை::இரண்டரை வருடங்களாக செல்வராகவன் இயக்கி வரும் படம் இரண்டாம் உலகம். ஆர்யா-அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண காடுகளில் மாதக்கணக்கில் முகாமிட்டு பழங்குடியின கெட்டப்பில் ஆர்யா-அனுஷ்கா இருவரும் நடித்து விட்டு வந்து படத்தின் ரிலீசுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக காத்திருக்கிறார்கள்.
அதையடுத்து அவதார் படத்துக்கு இணையான அனிமேஷன் வேலைகளில் பல மாதங்களாக ஈடுபட்டிருந்த செல்வராகவன் இப்போது படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் வேறு சில இசைப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஹாரிஜ் ஜெயராஜினால் இரண்டாம் உலகம் வேலைகளில் முழுசாக இறங்க முடியவில்லையாம்.
அதனால் அனிருத்தை வைத்து பின்னணி இசையை ரெடி பண்ணிக்கொள்ளுங்கள் என்று அவரே கூறினாராம். அதன் பிறகுதான் அனிருத் பின்னணி இசை கோர்க்கும் பணியில் இறங்கியுள்ளாராம். ஆனால், இந்த விசயம் தெரியாமல் செல்வராகவன்-ஹாரிஜ் ஜெயராஜுக்கிடையே மோதல் ஏற்பட்டதால்தான் அனிருத் பின்னணி இசையமைப்பதாக தவறான செய்தி பரவியிருப்பதாகவும் அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Comments
Post a Comment