சினிமா நடிகை சிந்து தற்கொலை முயற்சி : கடன் பிரச்னையால் மன உளைச்சல்?!!!

7th of September 2013
சென்னை::நடிகை சிந்து திடீரென தற்கொலைக்கு முயன்று, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தனியாக வசித்தார்:சென்னை, விருகம்பாக்கம் பகுதி, ஓட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி, 45; தொழிலதிபர். அவரது மனைவி சிந்து, 40; திரைப்பட குணச்சித்திர நடிகை. பரதேசி, நான் மகான் அல்ல உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
மேலும் முத்தாரம், வம்சம், பிள்ளை நிலா உட்பட, பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.சிந்துவிற்கும், அவரது கணவர் ரவிக்கும் இடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கருத்து வேறுபாடு ஏற்பட்டது.அதனால், அவர் கடந்த ஓராண்டாக, கணவரைப் பிரிந்து, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அப்பா வீட்டில், மகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அவர்  பிற்பகல், 3:00 மணிக்கு, ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, வீட்டில் மயங்கி விழுந்தார்.அதையறிந்த வீட்டில் இருந்தோர், அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.நடிகை சிந்து, கடந்த பல மாதங்களாக கடன் பிரச்னையில் சிக்கித் தவித்ததே, தற்கொலை முயற்சிக்கு காரணம் என, கூறப்படுகிறது.

Comments