தமிழில் டப்பாகும் கோபிசந்த் படங்கள்!!!

4th of September 2013
சென்னை::நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க தொடங்கியுள்ள கோபி சந்த், நடித்த சில தெலுங்குப் படங்கள் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் கோபி சந்த், நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்ற 'வாண்டட்' என்ற தெலுங்குப் படம் 'வேங்கைப்புலி' என்ற தலைப்பில் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது.

பி.வி.எஸ்.ரவி இயக்கியுள்ள இப்படத்தில் கோபி சந்துக்கு ஜோடியாக தீக்ஷா சேத் நடித்துள்ளார். ஆனந்த பிரசாத் தயாரித்துள்ள இப்படத்திற்கு சக்ரி இசையமைத்துள்ளார்.

தமிழில் வேல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. கில்லி, பையா போன்ற ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. 

Comments