17th of September 2013
சென்னை::சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள 'நையாண்டி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் டெடி பியர் எனத் தொடங்கும் பாடல் ஒன்றினை தனுஷ் பாடியிருந்தார். அந்தப் பாடல் தனிப் பாடலாக நாளை வெளிவர உள்ளது. பாடலாசிரியர் விவேகாவால் எழுதப்பட்டு கிப்ரானால் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்டுள்ளது. நடன இயக்குனர் பாபி இதில் பணியாற்றி உள்ளார்.
வேடிக்கை நிறைந்த காட்சி ஒன்றிற்காக இயக்குனர் சற்குணம் விளையாட்டுத்தனமான பாடல் ஒன்றினை எதிர்பார்த்தார். 'வத்திக்குச்சி' படத்தில் வரும் அம்மா வேக் மீ அப் என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுபோல் எதிர்பார்த்த அவருக்கு தன்னுடைய இந்த டியூன் மிகவும் பிடித்துப் போனதாக கிப்ரான் தெரிவித்தார். பாடலை ஒலிப்பதிவு செய்யும்போது கிப்ரானே இந்தப் பாடலைப் பாடியிருந்தார்.
இயக்குனர் இந்தப் பாடலை தனுஷ் பாடவேண்டும் என்று விரும்பினார். படப்பிடிப்பின்போது இந்தப் பாடலை அடிக்கடி கேட்டதினால் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே அந்தப் பாடலை தனுஷ் பாடி முடித்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments
Post a Comment