மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்குகிறார் இயக்குனர் ஷங்கர்!!!

28th of September 2013
சென்னை::தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல படங்களை தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார். வெயில், ஈரம், அனந்தபுரத்து வீடு, ரெட்டைச்சுழி, அறை எண் 305ல் கடவுள் என பல படங்களை தயாரித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு வசூலித்துக்கொடுக்கவில்லை. இதில் சில படங்கள் அவரது கையை நறுக்கென்று கடித்து விட்டன.

இதனால் ஆவென்று அலறிக்கொண்டு கையை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாக படம் தயாரிப்பதை நிறுத்தினார் ஷங்கர்.

ஆனால், தற்போது பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களை தயாரித்து வருவது போல் ஷங்கருக்கும் அந்த நிறுவனத்துடன் தனது எஸ் பிக்சர்ஸை இணைத்து படம் தயாரிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதாம். அதனால் முன்பு போலவே இப்போது சின்ன பட்ஜெட் படங்களாக தயாரிக்க திட்டமிட்டுள்ள ஷங்கர், ஏற்கனவே அடிபட்டவர் என்பதால் ரொம்ப ஜாக்கிரதையாக கதை கேட்கத் தொடங்கியிருக்கிறாராம்.

Comments