27th of September 2013
சென்னை::அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தை விட தனது ‘அழகுராஜா’வுக்கு கூடுதலாக தியேட்டர்களை பிடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறாராம் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா.
அஜித்தின் ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். அதேபோல், ராஜேஷ் டைரக்ஷனில் கார்த்தி நடித்துள்ள ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படமும் தீபாவளி ரிலீஸுக்கு தயாராகி விட்டது.
வருவது அஜித் படம் என்பதால் தியேட்டர்களை பிடிப்பதில் இந்த இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே மிகப்பெரிய பனிப்போர் நடந்து வருகிறது.
எப்படியாவது ஆரம்பத்தை விட அழகுராஜாவுக்கு கூடுதல் தியேட்டர்களை கவ்விக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் ஞானவேல் ராஜா. அதற்காக தியேட்டர்காரர்களுக்கு “பின்னாடி குடுங்க” என்ற ஒரு மிகப்பெரிய சலுகையையும் அவர் அறிவித்திருக்கிறாராம்.
அதன்படி அழகுராஜா படத்துக்கு அட்வான்ஸ் பணம் எதுவுமே வேண்டாம். படம் ரிலீஸான பிறகு மொத்த வசூலில் 80% பணத்தை கொடுத்தால் போதும்…’ என்று அவர் அறிவித்திருக்கிறாராம்.
இதனால் ‘ஆரம்பம்’ படத்துக்காக அட்வான்ஸ் பணத்தை தியேட்டர் அதிபர்களிடம் வசூலித்து வரும் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.
ஞானவேல் ராஜாவின் இந்த திடீர் சலுகையால் ‘ஆரம்ப’த்தை விட ‘அழகுராஜா’ தான் நமக்கு சேப்டி என்று நினைக்கும் தியேட்டர்காரர்கள் அவர் பக்கம் சாய ஆரம்பித்துள்ளனர்.
கடைசியாக எடுத்த சில படங்களால் கடனாளியான பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை அந்தக் கடன் சுமையிலிருந்து காப்பாற்றத்தான் மனிதாபமானத்தோடு வலிய வந்து கால்ஷீட் கொடுத்தார் அஜித்.
ஒரு ஹீரோவே ஒரு தயாரிப்பாளரை காப்பாற்ற நினைக்கும் போது, ஒரு சக தயாரிப்பாளர் இன்னொரு தயாரிப்பாளரை இம்சை செய்வது எந்த ஊர் நியாயம்? என்று கொதிக்கிறார்கள் இதன் உள் விவகாரங்கள் தெரிந்தவர்கள்.
Comments
Post a Comment