21st of September 2013
சென்னை::விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லாவைத் தொடர்ந்து அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடித்துள்ளார். அதேபோல் ஆர்யா-டாப்ஸியும் இன்னொரு ஜோடிகளாக நடித்துள்ளனர். அதனால் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவுக்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் இருக்கும். டாப்ஸி சும்மா ஏதாவது சிறிய கேரக்டர் பண்ணியிருப்பார் என்று கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.
ஆனால் இந்த சேதி டாப்ஸியின் காதுகளுக்கு சென்றபோது ஷாக் ஆகி விட்டாராம். இந்த மாதிரி செய்தி பரவுவது தனது மார்க்கெட்டுக்கு உலை வைத்து விடுமே என்று அதுபோன்று செய்திகளை கேள்விப்பட்டதாக சொன்னவர்களை தொடர்பு கொண்டு, அப்படியெல்லாம் இல்லை. ஆரம்பம் படத்தில் நயன்தாராவுக்கும், எனக்கும் சரிசமமான வேடம்தான்.
இந்தபடத்துக்கு என்னை தொடர்பு கொள்ளும்போதே, நயன்தாரா இருப்பதால் நானும் தயங்கினேன். அப்போது என்னை அழைத்த இயக்குனர், நயன் அஜீத்துக்கு ஜோடி என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு உன் ரோலை டம்மி பண்ணி விடமாட்டேன். கதையோடு பார்க்கும்போது இரண்டுபேருக்குமே ஒரே அளவான வேடம்தான். அதேபோல் இரண்டுபேருக்குமே எண்ணிக்கையிலும் ஒரே அளவு காட்சிகள்தான் உள்ளது என்று ஸ்கிரிப்ட்டையே என்னிடம் காட்டினார். அதனால்தான் நம்பி நடித்தேன்.
இப்போது படம் பார்க்கையில் கதையோடு எனது கேரக்டருக்கு இருக்கிற முக்கியத்துவம் என்னை சந்தோசப்பட வைத்திருக்கிறது. அதற்காக டைரக்டர் விஷ்ணுவர்தனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்கிறார் டாப்ஸி.

Comments
Post a Comment