பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த நடிகர் விக்ரம்!!!

24th of September 2013
சென்னை::விக்ரம் என்ற நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்பதையே ரசிகர்கள் மறந்துவிடும் அளவுக்கு, விக்ரமின் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. விக்ரமின் நடிப்பில் வெளியான சில படங்களும் தொடர் தோல்விகளை தழுவியதால் அவருடைய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துவிட்டனர்.

இதற்கிடையில், ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விக்ரம், அப்படத்திற்காக ஆண்டுகள் பல ஒதுக்கியிருக்கிறார். ஐ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடக்கும் பிறகு, பின்னணி வேலைகள் என்று, அதற்கு சில மாதங்களாகும், எப்படியும் 2014ஆம் ஆண்டு பாதியில் தான் ஐ வெளியாகும். பிறகு வேறு படங்களுக்கு கதை கேட்டு, நடித்து அப்படங்களை எப்போது வெளியிடுவது என்று யோசித்த நடிகர் விக்ரம், "பொருத்தது போதும் பொங்கி எழு" என்ற ஸ்டைலில் தற்போது பொங்கி எழுந்துள்ளார்.

ஐ படத்தினால் பல ஆண்டுகளை செலவழித்தாலும், அவற்றை வட்டியுடன் திரும்ப பெற வேண்டும் என்று முடிவு செய்த விக்ரம், ஒரே ஆண்டில் மூன்றுப் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அவர் கணக்குப்படி 2014ஆம் ஆண்டி ஐ படம் வெளியான பிறகு, அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று படங்களை வெளியிட்டு, மொத்தத்தில் 2014ஆம் ஆண்டில் நான்குப் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளார்.

டிசம்பர் மாதம் ஐ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், ஜனவரி மாதம் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் ஓய்வு எடுக்கும் விக்ரம், பிறகு தரணி இயக்கத்தில் ஒரு படம், ஹரி இயக்கத்தில் ஒரு படம், கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரே ஆண்டுகளில் மூன்று படங்களில் நடிக்கப் போகிறார். அதுமட்டும் இன்றி இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் ஒரே ஆண்டில் முடிந்து, படமும் ஒரே ஆண்டில் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

Comments