29th of September 2013
சென்னை::ஒரு படத்திலாவது நல்லா கிளாமராக நடிக்க ஆசைப்படுவதாக சொல்கிறார் நடிகை நந்திதா. அட்டகத்தி படத்தில் கல்லூரி மாணவியாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற ரோலில் யதார்த்தமாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா. இந்தபடத்திற்கு பிறகு அவர் நடித்த எதிர்நீச்சல் படமும் நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். சுமார் மூஞ்சி குமாரான விஜய்சேதுபதி, இவரை விரட்டி விரட்டி காதலிக்கிறாராம். இந்தபடமும் நந்திதாவுக்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் தானாம். அதேப்போல் இவர் நடித்துள்ள இன்னொரு படமான நளனும் நந்தினியும் படமும் இதேப்போன்று தானாம். தொடர்ந்து இதுபோன்று ஒரே ரோலில் நடிப்பது நந்திதாவுக்கு போரடித்துவிட்டதாம்.
இதுப்பற்றி அவர் கூறும்போது, எனக்கு கிளாமர் ரோலில் தான் நடிக்க ஆசை. சமீபத்தில் தான் இது தொடர்பாக போட்டோ ஷூட்டும் எடுத்தேன். ஆனால் எனக்கு வரும் 10 கதையில் 8 கதை யதார்த்தமா, பக்கத்து வீட்டு பெண் போன்ற வேடம் தான் கிடைக்கிறது. ரசிகர்களும் அதை தான் விரும்புவாங்க போல. இருந்தாலும் ஒரு படத்திலாவது நல்ல கிளாமர் ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கு, இன்னும் எவ்வளவோ படங்கள் இருக்கு, பார்க்கலாம் என்கிறார்.

Comments
Post a Comment