கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி மாடல் அழகியை கரம்பிடித்தார்!!!

18th of September 2013
சென்னை::தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி மாடல் அழகி பிரியா தலூரை கரம் பிடித்தார்.

சென்னையில் திருமணம் எளிமையாக நடைபெற்றது. கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்கவில்லை.
 
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன்.... வீரர்கள் முரளிவிஜய், பத்ரி நாத், அணிருதா ஸ்ரீகாந்த் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள். 31 வயதான பாலாஜி ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
 
முதல் 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். வேகப்பந்து வீரரான அவர் 8 டெஸ்ட், 30 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.
 
கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச போட்டியில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார். தற்போது தமிழக அணிக்காக முதல்தர போட்டியில் விளையாடி வருகிறார்.

Comments