அஜித்தே இல்லாம நடத்தி என்ன புண்ணியம்?” : ‘ஆரம்பம்’ ஆடியோ பங்ஷன் கேன்சல்!!!

19th of September 2013
சென்னை::எந்த சினிமா பங்ஷன்களிலேயும் கலந்துக்கக்கூடாது என்ற திடமான முடிவில் இருப்பதால்  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஆரம்பம்’ படத்தின் ஆடியோ பங்ஷன் இப்போ கடைசி நேரத்தில் கேன்சல் ஆகியிருக்கிறதாம்.

பில்லா -2 படத்தின் தோல்விக்கப்புறம் ரொம்ப டைம் எடுத்து அஜித் நடிக்கிற படம்கிறதால ஆரம்பம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு.

இந்தப்படத்தோட பாடல்கள் 19-ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் ஆடியோ ரிலீஸை மிகப்பெரிய பங்ஷனா வெச்சி கிராண்டா ரிலீஸ் பண்ணுவாங்க என்றும் அஜித் ரசிகர்கள் ஆவலோட காத்திருந்தாங்க.
கடந்த மே மாசம் அஜித்தோட பிறந்தநாளுக்கு ரிலீஸான ஆரம்பம் படத்தோட டீஸர் ரசிகர்கள் மத்தியில் ரொம்ப பாப்புலரானதால படத்தோட ட்ரெய்லரையும் இந்த பங்ஷன்லேயே ரிலீஸ் பண்ண திட்டம் போட்டாங்க.

ஆடியோ ரிலீஸ், ட்ரெய்லர் பங்ஷன்னு ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் பறிக்க அஜித் ரசிகர்கள் குஷியா இருந்த நேரத்துல
இப்போ ரெண்டுமே இல்லேங்கிறது தான் அவரது ரசிகர்களுக்கு அஜித் தரும் சோகமான செய்தி.

ஆமாம், அஜித் எந்தவித சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற விடாப்பிடியான முடிவில் தான் இப்போது வரை இருந்து வருகிறாராம்.
இதனால் ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் “ஹீரோவே வராம கிராண்ட்டா ஆடியோ பங்ஷன் நடத்தி என்ன புண்ணியம்”னு இப்போ எந்தவித ஆராவாரமும் இல்லாமல் 19-ஆம் தேதி கடைகளுக்கு மட்டும் ஆடியோ சிடிக்களை அனுப்பு வைக்கிற வேலைகள்ல மும்முரமா இறங்கியிருக்காங்களாம்.

Comments