17th of September 2013
சென்னை::கல்யாண வீட்டில் பிள்ளையை வளர்க்கிறார்…’ என்கிற பழமொழி மாதிரி, கல்பாத்தி அகோரம் காசில் டைரக்ஷனைக் கற்றுக்கொள்கிறார் வடிவேலு.
தெனாலிராமன்’ படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. படத்தின் டைரக்டரான யுவராஜ் சொல்லும்படி நடிக்க மறுத்து, தன் இஷ்டத்துக்கு வடிவேலு நடிக்க… அனலாய்க் கொதிக்கிறார், யுவராஜ்.
அதுமட்டுமல்ல, அவருடன் நடிக்கும் சக நடிகைகளுக்கும் அவரே நடிப்பு சொல்லிக்கொடுத்து எரிகிற நெருப்பில் பெட்ரொலை ஊற்றி வருகிறார்.
வனவாசம் மாதிரி ரெண்டு வருஷம் கஷ்ட காலத்துல இருந்த வடிவேலுவை தேடிப்போய் கதைசொல்லி மறுவாழ்வு கொடுத்தார் யுவராஜ். இப்போ என்னடான்னா டைரக்டரோட வாழ்வைப் பறிச்சி கஷ்டகாலத்தைக் கொடுக்கிறார் வடிவேலு.
மனுஷனுக்கு கடவுள் கஷ்டத்தைக் கொடுக்குறது திருந்தி வாழத்தான். ஆனால், வடிவேலு திருந்தவே இல்லை. முன்பைவிட ஓவரா ஆடுறார்…’ என்று டைரக்டரின் நண்பர்கள் புலம்புகின்றனர்.
Comments
Post a Comment