ஆதலால் காதல் செய்வீர் படத்தை முடித்த கையோடு சுசீந்திரன் ஆரம்பித்த பாண்டியநாடு: தீபாவளி ரேசில்!!!


10th of September 2013
சென்னை::ஆதலால் காதல் செய்வீர் படத்தை முடித்த கையோடு சுசீந்திரன் ஆரம்பித்த படம் பாண்டியநாடு. விஷால், லட்சுமி மேனன் ஹீரோ, ஹீரோயின். கார்த்திக், காஜல் அகர்வால் நடிப்பில் டைரக்ட் செய்த நான் மகான் அல்ல மாதிரியான கமர்ஷியல் ஆக்ஷன் படம். விஷால் பிலிம் பேக்டரிதான் தயாரிப்பு. பட்டத்து யானை சறுக்கி விட்ட பிறகு மதகஜராஜாவை எப்படியாவது ரிலீஸ் பண்ணி ஒரு ஹிட் கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டார் விஷால்.
 
ஆனால் அது நடக்காமல் போகவே தனது சொந்த தயாரிப்பான பாண்டியநாட்டை ரிலீஸ் பண்ணி தன்னை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தார். அதனால் பாண்டிய நாடு தீபாவளிக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.  முழுமூச்சாக படத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.  பட்டத்துயானை தராத வெற்றியை பாண்டியநாடு தரும் என நம்புகிறார் விஷால்.

Comments