காஜலை காலி பண்ணிய ராதிகா!!!

13th of September 2013
சென்னை::லாரன்ஸ் இயக்கும் முனி 3 கங்காவில் முதலில் டாப்ஸிதான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் திடீரென்று கதையில் சில திருத்தம் செய்யப்போவதாக சொன்ன லாரன்ஸ் இன்னொரு நாயகியாக அஞ்சலியை கதைக்குள் திணித்தார். இதனால் ஷாக் ஆகிப்போனார் டாப்ஸி. இருப்பினும் கைவசம் வேறு படங்கள் எதுவும் இல்லாததால் வார்த்தை விடாமல் அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதேபோன்ற நிலைமைதான் இப்போது காஜல்அகர்வால் விசயத்திலும் ஏற்பட்டுள்ளது. ஆல்இன்ஆல் அழகுராஜா படத்தில் இவர்தான் கதாநாயகி. ஆனால், படத்தில் செகண்ட் ஹீரோயினி என்று இறக்கிவிடப்பட்ட தோனி படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவுக்கும் இப்போது கிட்டத்தட்ட கதாநாயகி அளவுக்கு பெரிய ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அதுவும் காஜலை மாதிரி டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படாமல் கதையையே திருப்பிவிடும் வேடத்தில் ராதிகா ஆப்தே நடிக்கிறாராம். இதனால் முக்கிய கதாநாயகி என்று சொல்லி என்னை டம்மி பண்ணி விட்டர்களே என்று புலம்புகிறாராம் நடிகை.

Comments